நரிக்குடி அன்னசத்திரம் முன்பு பல்வேறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மத்திய, மாநில அரசு களை வலியுறுத்தி அகமுடையார் சங்க கூட்டமைப்பு மற் றும் மருதுபாண்டியர்களின் நேரடி வாரிசுதாரர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அகமுடையார் சங்க கூட்ட மைப்பு பேரவை நிறுவனர் ஜெயமணி தலைமை தாங்கி னார். இந்த ஆர்ப்பாட்டத் தில் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே என்.முக்கு ளம் கிராமத்தில் பிறந்த சுதந் திர போராட்ட வீரர்களான மாமன்னர் மருதுபாண்டியர் கள் வாழ்ந்த ஆதாரமாக விளங்கும் சுமார் 300 ஆண்டு கள் பாரம்பரியம் மிக்க நரிக் குடி அன்ன சத்திரத்தை மீண் டும் புதுப்பொலிவுடன் புனர மைத்து ஆவணங்களுடன் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். மருதுபாண்டியர் பிறந்த மற்றும் நரிக்குடி சத்திரத்தில் | நினைவு மணிமண்டபம் மற் றும் முழு உருவ வெண்கல சிலைகளை நிறுவ வேண்டும். மருதுபாண்டியரின் அடுத்தடுத்த தலைமுறையான நேரடி வாரிசுதாரர்களுக்கு தொடர்ந்து ஓய்வூதியம் வழங் கும் அரசாணை வெளியிட வேண்டும்.
நரிக்குடி சத்திரத்தில் ஆண் டுதோறும் மருதுபாண்டியர் கள் குருபூஜை அன்று கட்டுப் பாடுகள் இன்றி பொங்கல் வைத்து வழிபட அனுமதிக்க வேண்டும். சாதி வாரி கணக் கெடுப்பு என்பது உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மருதுபாண்டியரின் நேரடி வாரிசுதாரர்கள், அகமுடை யார் சங்க கூட்டமைப்பு பேரவை நிர்வாகிகள், பெண் கள், உள்பட ஏராளமானோர் |திரளாக கலந்துகொண்டனர்.