19/09/2025 வெள்ளிக் கிழமை மாலை 7:30 மணியளவில் அகில இந்திய மருதுபாண்டியர் பேரவை மற்றும் மருது மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் திரு.S.கண்ணன் அவர்கள் மாண்புமிகு நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் நிதித்துறை மற்றும் கார்ப்பரேட் நிர்வாகத் துறை அவர்களை மதுரை கோர்ட்யார்ட் மேரியட் நட்சத்திர ஹோட்டல் விருந்தினர் அறையில் தனது கட்சி நிர்வாக உறுப்பினர்களோடு சந்தித்து பல முக்கியமான கோரிக்கைகளான மருதுபாண்டிய சகோதரர்களின் "ஜம்பு தீபகற்ப பிரகடனம்" அறிவிப்பின் மூலமான சுதந்திர தியாகத்தை போற்றும் வகையில் நினைவுத்தூண் சின்னம் அமைத்தல், கப்பல் மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகளுக்கு மருது சகோதரர்கள் பெயர் சூட்டுதல் வேண்டும் என கோரிக்கை மனுவினை கொடுத்து வலியுறுத்தினார். திரு.வி.ரமேஷ், மதுரை மாவட்ட செயலாளர் அகில இந்திய மருதுபாண்டியர் பேரவை, அவர்களும், திரு.S.சந்திரன், 48 1/2 கிராம கீழமண்டு அகமுடையார் சங்கத் தலைவர், அவர்களும், திரு.ரெங்கசாமி, செயலாளர், அகமுடையார் சங்கம், அவர்களும், Dr.MAK. ராமமூர்த்தி ராய், பொதுச் செயலாளர், மருது மக்கள் கட்சி, அவர்களும் பங்கேற்று தலைவர் அவர்களின் வழிகாட்டுதலோடு மேல்குறிப்பிட்ட கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுதல் வேண்டும் என ஒருமித்த குரலோடு எடுத்துரைத்தார்கள். மேலும் எங்களது இயக்கங்கள் தொடர்ச்சியாக சமூகத்திற்கான பல முக்கியத் தேவைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறது.