சிவகங்கை மாவட்டம், "மருதுபாண்டியர்களின் 224வது நினைவு தின அரசு விழாவினை" முன்னிட்டு, திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைந்துள்ள மருதுபாண்டியர் நினைவு மண்டபத்தில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள், மாண்புமிகு வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள், மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாக ராஜன் அவர்கள், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள், மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் டாக்டர்.டி.ஆர்.பி. ராஜா அவர்கள் ஆகியோர் மருதுபாண்டியர்களின் திருவுருவச்சிலைகளுக்கு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கா.பொற்கொடி,இ.ஆ.ப., அவர்கள், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசி ரவிக்குமார் அவர்கள், திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் திருமதி கோகிலாராணி உட்பட பலர் உள்ளனர்.